பற்கள் மட்டும் போதாது, ஈறுகளும் முக்கியம்! அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
பற்களின் அழகைப் பேணுவதில் காட்டும் அக்கறையை, அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் ஈறுகளின் ஆரோக்கியத்தில் நாம் காட்டுகிறோமா? இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடித்தளமே நமது வாய்வழி சுகாதாரமும், ஈறுகளின் பாதுகாப்பும் தான் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!












