சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்விச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

VIGNESWARAN ABIRAMY•24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு8
பகிர்க:WhatsAppFacebook
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்விச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்விச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைதிக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 308 ஆசிரிய பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வின் ஓரங்கமாக, அமைதிக்கல்வித் திட்டச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் விளக்கங்களையும் எடுத்துக்காட்டும் விசேட கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் நிதி நிர்வாக இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. சிவகுமார் மற்றும் திருமதி. செல்ரன் யூடிற் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், கல்லூரியின் அமைதிக்கல்வித் திட்ட விரிவுரையாளர்களும் இணைப்பாளர்களுமான திருமதி. ஜெ. தயாநிதி, திருமதி. பி. மோகன்ரா, திரு. எ. இ. சுமந்திரன், திருமதி. எஸ். கார்த்திகா ஆகியோரும், பிறேம்ராவத் நிறுவனத்தின் அமைதிக்கல்வித் திட்ட இணைப்பாளர்களான குகானந்தராஜா கீர்த்திகா, திரு. ப. விமலநாதசர்மா, திருமதி. ப. பத்மாதேவி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த 308 ஆசிரிய பயிலுனர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm