இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையின் சுகாதார அமைப்பில் நாளுக்கு நாள் கடுமையான நெருக்கடி நிலை உருவாகி வருவதுடன், இதனால் புற்றுநோயாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.












