சுவிஸ் தூதரின் மனைவிக்கு எபோலா தொற்று உறுதி
சுவிட்சர்லாந்தில் எபோலா வைரஸ் தொற்று நபர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அண்மையில் உகாண்டா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், அவருக்கு இந்த எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












