ரைன் நீர்வீழ்ச்சியில் வரலாறு காணாத அளவுக்குக் குறையும் நீர்வரத்து!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ரைன் நீர்வீழ்ச்சியில், நீர்வரத்து வரலாறு காணாத குறைந்த அளவை நெருங்கி வருகிறது. வெப்பமான வானிலையும் நீடித்த வறட்சியும் ரைன் நதியின் நீர்மட்டத்தைப் பெரிதும் பாதித்துள்ளன. இதனால், 1921ஆம் ஆண்டு பதிவான மிகக் குறைந்த நீர்வரத்து அளவு விரைவில் முறியடிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












