வரலாற்றைப் பாதுகாக்க புதிய முயற்சி: 22 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் சுவிட்சர்லாந்து ஆவணப்பகம்!
சுவிட்சர்லாந்தில் உள்ள பழமையான வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'சென் கேலன்' அபேயி ஆவணப்பகம் தனது வரலாற்று நூல்கள் மற்றும் ஆவணங்களின் 22 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.












