சுவிட்சர்லாந்தின் 13ஆவது மாத ஓய்வூதியம்: சராசரியாக 1,580 சுவிஸ் பிராங்க் வழங்கப்படும் என அறிவிப்பு!
சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியதாரர்களுக்கு முதல்முறையாக வழங்கப்படவுள்ள 13ஆவது மாத அரசு ஓய்வூதியத் தொகையின் (AHV Pension) சராசரி மதிப்பு குறித்து அந்நாட்டு அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஓய்வூதியதாரர் ஒருவருக்குச் சராசரியாக 1,580 சுவிஸ் பிராங் (Swiss Francs) வரை கூடுதல் தொகையாகக் கிடைக்கப்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.












