ஆண்டுக்கு 10,000 முறைப்பாடுகள்: சிறுவர் பாதுகாப்பிற்கு புதிய தேசிய வழிகாட்டல் கோவை!

ஆண்டுக்கு 10,000 முறைப்பாடுகள்: சிறுவர் பாதுகாப்பிற்கு புதிய தேசிய வழிகாட்டல் கோவை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்காகத் தேசிய வழிகாட்டல் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஆண்டுதோறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சிறுவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் காணொளிகளை வெளியிடும்போது அவர்களின் அடையாளமும் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பணப்பயன் (Monetization) ஈட்டும் நோக்கோடு சிறுவர்களின் உள்ளடக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், பெற்றோரின் விழிப்புணர்வின்மையால் சிறுவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரசபையின் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்டு, செய்தி அறிக்கையிடலின் போது சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே இந்த புதிய 'தேசிய வழிகாட்டல் கோவை' (National Guidelines) தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




