சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு! 2027-க்குள் இலங்கை கொண்டுவரத் திட்டம்!

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு! 2027-க்குள் இலங்கை கொண்டுவரத் திட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சர்வதேச இன்டர்போல் அமைப்பினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 இலங்கைக் குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தலைமறைவாக உள்ள இந்தக் குற்றவாளிகளை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட சட்டவிரோதச் சொத்துக்களை முடக்கும் வகையில், பொலிஸின் இரண்டு விசேட பிரிவுகள் 24 மணி நேரமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இதன் கீழ் 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரை இதுவரை சுமார் 4,695 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கம், காணிகள், வாகனங்கள் மற்றும் பணத்தைச் சொத்தாகப் அரசு பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 107 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 4,483 கிலோ ஹெரோயின் மற்றும் 121 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 7,129 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 கிராமுக்கு மேல் போதைப்பொருட்களை வைத்திருப்போர் மற்றும் கடத்துவோருக்கு நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், போதைப்பொருள் மற்றும் குற்ற ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




