சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

150 கோடி பெண்கள் காலநிலை அபாயத்தில் - ஐநா அதிர்ச்சித் தகவல்!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
150 கோடி பெண்கள் காலநிலை அபாயத்தில் - ஐநா அதிர்ச்சித் தகவல்!

150 கோடி பெண்கள் காலநிலை அபாயத்தில் - ஐநா அதிர்ச்சித் தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலகளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும், அதாவது சுமார் 150 கோடி பேர் கடுமையான காலநிலை பாதிப்பு மற்றும் இடர்பாடுகள் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாக ஐநா பெண்கள் அமைப்பு (UN Women) எச்சரித்துள்ளது.

துருக்கி நாட்டின் அண்டார்டியா நகரில் நடைபெற்ற சிஓபி31 (COP31) காலநிலை மாநாட்டின்போது வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சூறாவளிகள், கடுமையான வறட்சி போன்ற காலநிலை அச்சுறுத்தல்களுடன், பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் ஆழமான பாலின சமத்துவ இன்மையும் ஒன்றிணையும் பகுதிகளிலேயே இவர்கள் வசிப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மிக மோசமான சூழ்நிலைகளின் காரணமாக, உலகளவில் மேலும் 141 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிர வறுமைக்குள் தள்ளப்படலாம் என்றும் ஐநா எச்சரித்துள்ளது. குறிப்பாக, காலநிலை மாற்றத்திற்கு மிகக் குறைந்த அளவே காரணமான வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களே இதன் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலை எதிர்கொள்ள அரசுகள் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட காலநிலை நிதியுதவிகளை விரிவுபடுத்துமாறும், பெண் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஐநா பெண்கள் அமைப்பு தீவிர வலியுறுத்தல் விடுத்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm