157-க்கு 60 வாக்குகள்: 2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது!

157-க்கு 60 வாக்குகள்: 2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை 7 நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த சனிக்கிழமை உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் முற்பகல் 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்காகப் பாராளுமன்றம் கூடவுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




