2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இலங்கை வீரர் லஹிரு லக்மால் அசத்தல் சாதனை!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இலங்கை வீரர் லஹிரு லக்மால் அசத்தல் சாதனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக சிறந்த பெறுபேறை குத்துச்சண்டை வீரர் லஹிரு லக்மால் சந்த்ரபண்டார பதிவுசெய்துள்ளார்.
ஏனைய தனி நபர் போட்டிகளிலும் அணி நிலை போட்டிகளிலும் இலங்கை வீர, வீராங்கனைகள் தோல்வி அடைந்த நிலையில் குத்துச்சண்டை வீரர் லஹிரு லக்மால் சந்த்ரபண்டார முன்னோடி சுற்றில் வெற்றி பெற்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள 16 வீரர்கள் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார்.
நிஷியோ ஜிம்னாசியம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 32 வீரர்கள் சுற்றில் 70 கிலோகிராம் எடைப் பிரிவு முன்னோடிப் போட்டியில் யேமென் வீரர் முஸ்தபா சயீதை எதிர்கொண்ட லஹிரு லக்மால் சந்த்ரபண்டார இலகுவாக வெற்றிபெற்றார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




