
பிரிட்டனில் இருந்து பிரியும் 3 நாடுகள்?: ஐரோப்பிய அரசியலில் பெரும் திருப்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து தனி நாடாகும் முயற்சியாக, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் இணைந்து சுயநிர்ணய உரிமைக்கான கூட்டறிக்கையில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதால் ஐரோப்பிய அரசியலில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மூன்று நாடுகளிலும் தற்போது சுதந்திரத்திற்கு ஆதரவான தலைவர்களே ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர். இதன் காரணமாக, கார்டிஃப் நகரில் நடைபெறும் முக்கியச் சந்திப்பில், லண்டன் நாடாளுமன்றத்தின் தலையீடு இன்றி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் கூறுகையில்:
"வரலாற்றில் முதன்முறையாக ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் சுதந்திரத்தை விரும்பும் தலைவர்களே ஆட்சி செய்கின்றனர். தற்போதைய சூழல் இனி நீடிக்க முடியாது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.பிரிட்டன் அரசு தனது கட்டுப்பாட்டிற்கு பிந்தைய எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் கீழ் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை தனித்து இயங்கும் சுதந்திர நாடுகளாக மாறி ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளன. அதேவேளையில், வட அயர்லாந்து பிரிட்டனில் இருந்து விலகி அயர்லாந்து குடியரசுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.
மூன்று பிராந்தியங்களும் ஒரே நேரத்தில் பிரிட்டனில் இருந்து வெளியேற ஆயத்தமாகி வருவது, பிரிட்டிஷ் பேரரசின் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




