பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் –இந்திய தமிழக அரசு அறிவிப்பு!
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் –இந்திய தமிழக அரசு அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (24) சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும்.
இத்திட்டம் 2027 வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையிலிருந்து செயல்படுத்தப்படும்.
ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த முக்கிய நலத்திட்டம், நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1.30 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிக்கவுள்ளது.
இது தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாத குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




