இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தொண்டர்கள் சேவையில் இணைவு!

இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தொண்டர்கள் சேவையில் இணைவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாண பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்த, அமெரிக்க அமைதிப் படையின் 34 தன்னார்வத் தொண்டர்கள் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர். 2018-க்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப்பெரிய குழு இதுவாகும்.
இவர்களுக்கான சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த இந்தத் தொண்டர்கள் பணியாற்றவுள்ளனர். நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, "இராஜதந்திர உறவுகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து மட்டுமல்ல, சில நேரங்களில் வகுப்பறை மேசையிலிருந்தும் ஆரம்பிக்கலாம்" எனத் தெரிவித்ததோடு, இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்தும் இத்திட்டத்தையும் பாராட்டினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




