சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

முதல் 8 மாதங்களில் அரசாங்கத்தின் வரியல்லாத வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

VIGNESWARAN ABIRAMY•15 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
முதல் 8 மாதங்களில் அரசாங்கத்தின் வரியல்லாத வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

முதல் 8 மாதங்களில் அரசாங்கத்தின் வரியல்லாத வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்கத்தின் வரியல்லாத வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 39.1 சதவீதத்தால் கணிசமாக வளர்ச்சியடைந்து 314.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாகக் கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம் அதிகரித்துள்ளமை இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பங்களிப்பு வீத அதிகரிப்பு காரணமாகச் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளில் இருந்து கிடைத்த வருமானம் 45.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இது 36.6 பில்லியன் ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாடகை வருமானம் 31.8 சதவீதத்தால் அதிகரித்து 5.1 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதோடு, அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் இலாபம் மற்றும் பங்கு இலாபங்கள் ஊடாகக் கிடைத்த வருமானமும் 36 சதவீதத்தால் அதிகரித்து 19.9 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், 2026-ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட 360 பில்லியன் ரூபா வரியல்லாத வருமான இலக்கில், முதல் எட்டு மாதங்களுக்குள்ளேயே 87.4 சதவீதத்தை அரசாங்கம் ஈட்டியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm