அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பரபரப்பு: பாலியல் புகாரில் 55 வயது விரிவுரையாளர் கைது!

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பரபரப்பு: பாலியல் புகாரில் 55 வயது விரிவுரையாளர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அம்பாறை - அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரை அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தகாத காணொளி காட்டி அச்சுறுத்தல்குறித்த விரிவுரையாளர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குத் தனது மொபைல் போன் மூலம் தகாத காணொளிகளைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், அவர் கல்லூரிப் பாடங்களுக்கான மதிப்பெண்களை வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
இச்செயல் குறித்து நிர்வாகத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ புகார் அளித்தால், பாடங்களில் மதிப்பெண்களைக் குறைத்துத் தோல்வியடையச் செய்வதாகக் கூறி மாணவிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் எவ்விதப் புகாரும் செய்யாமல் மௌனம் காத்து வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசேட பொலிஸ் குழுவினர் கல்லூரிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனியாக வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சாட்சியங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரான விரிவுரையாளரைக் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகைது செய்யப்பட்ட சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




