சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!

VIGNESWARAN ABIRAMY•19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் பதிவான மிகப்பெரிய ஒற்றை ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்றாகும்.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் சென்னையில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகத்துக்குரிய வாகனத்தையும், அதற்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் இடைமறித்துச் சோதனையிட்டனர். அதில், 69 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 71.24 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி ஊடாகக் கரையோரப் பாதை வழியாக இலங்கைக்கு இந்தப் போதைப்பொருளைக் கடத்துவதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm