சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

80,000 பட்டதாரிகள் வீதியில்; அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு கூற்றுக்கு சஜித் பதிலடி

VIGNESWARAN ABIRAMY•14 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
80,000 பட்டதாரிகள் வீதியில்; அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு கூற்றுக்கு சஜித் பதிலடி

80,000 பட்டதாரிகள் வீதியில்; அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு கூற்றுக்கு சஜித் பதிலடி குறித்த பிரத்யேக ஒளிப்படம்

80,000 க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறி வருகின்றது.

அவ்வாறு தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தால் 80,000 வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில் இருப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தகவலின் பிரகாரம், உயர்கல்வியில் உச்சத்தை எட்டியவர்களிடையே தெற்காசியாவிலேயே அதிகூடிய வேலையின்மை வீதமான 43% எமது நாட்டில் காணப்படுவதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பல தசாப்தங்களாகப் பணியாற்றியும் இன்றுவரை தேர்தல் வாக்குறுதியாகவே ஆசிரியர் சேவையில் இணைய முடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றன.

மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் வேலை காணப்படுவது ஒரு அம்சம் மாத்திரமே என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் ஏனைய விடயங்கள் உருவாகின்றன. என அவர் மேலும் தெரிவித்தார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm