சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

கடைசி விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்ப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
கடைசி விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்ப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்!

கடைசி விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்ப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து வெற்றிகரமாக இலக்கை விரட்டிய சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. இதன் மூலம் 51 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் வசம் இருந்த உலக சாதனையை பாகிஸ்தான் முறியடித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் களமிறங்கிய பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் 154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது.

ஆனால், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷதாப் கான் (Shadab Khan) மற்றும் ஹாரிஸ் ரவூஃப் (Haris Rauf) ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி பிரிக்கப்படாத 10வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். ஷதாப் கான் அபாரமாக விளையாடி தனது கன்னி ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார்.

இதற்கு முன்னர், கடந்த 1975-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸின் டெரிக் முர்ரே - ஆண்டி ராபர்ட்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வைத்ததே சாதனையாக இருந்தது. அரை நூற்றாண்டு காலம் முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணியே முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm