சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

VIGNESWARAN ABIRAMY•11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும் இழப்புகளைக் குறைப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், அனர்த்த முகாமைத்துவம் என்பது ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல், அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு நகரில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றும் நீர் தேங்கும் நிலைமைக்குக் கழிவகற்றல் முகாமைத்துவம் முதல் நீர்வழிகளை முறைப்படி பேணுதல் வரையிலான விரிவான திட்டங்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், கொலன்னாவை மற்றும் கடுவலை பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக பல்லாயிரம் மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பிரதமரின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm