
தென்காசியில் தொடங்கியது நடிகர் ஜெய்யின் புதிய படம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நடிகர் ஜெய் கதநாயகனாக நடிக்கும் புதிய திகில் நகைச்சுவைத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் சிறப்புப் பூஜையுடன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
'தியாகராஜா டாக்கீஸ்' (Thiagaraja Talkies) நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.எம். பிரபாகரன் தயாரிக்கிறார்; அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.
தென்காசியில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் தொடர்ந்து 23 நாட்களுக்கு தென்காசியில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
முற்றிலும் திகில் மற்றும் நகைச்சுவைக் கலவையாக உருவாகவுள்ள இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




