
நடிகர் சரத்குமாரின் 177-வது திரைப்படம்: அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியானது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ் சினிமாவில் 176-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இன்றும் சுறுசுறுப்பாக வலம் வரும் நடிகர் சரத்குமார், அடுத்ததாக நடிக்கவுள்ள 177-வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, ‘டாக்ஸி’ (TAXI) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார்.
பெர்ஜெயா குழும நிறுவனங்கள் மற்றும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




