
நடிகர் நஸ்லெனுக்கு ரூ.9 லட்சம் கைக்கடிகாரத்தை பரிசளித்த நடிகர் சூர்யா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' திரைப்படத்தின் வில்லன் நடிகர் நஸ்லெனுக்கு, சூர்யா விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் 'பிரேமலு' உள்ளிட்ட படங்களின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நஸ்லென், ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான 'சீன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் 'ஈஸ்வரன்' என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார்.
உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான சூர்யா, நஸ்லெனின் நடிப்பைப் பாராட்டி சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலகப் புகழ்பெற்ற 'கார்டியர்' (Cartier) நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை அவருக்குப் பரிசளித்துள்ளார்.
தனது புதிய மலையாளப் படத்தின் விளம்பர நேர்காணலின் போது இத்தகவலைப் பகிர்ந்து கொண்ட நஸ்லென், தரமான கைக்கடிகாரம் அணிய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை சூர்யா நிறைவேற்றிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அன்பான செயல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




