காதுகேட்கும் தொழினுட்பத்தில் AI புரட்சி: சுவிஸ் நிறுவனத்தின் Phonak EON புதிய கருவி சந்தைக்கு வந்தது!

காதுகேட்கும் தொழினுட்பத்தில் AI புரட்சி: சுவிஸ் நிறுவனத்தின் Phonak EON புதிய கருவி சந்தைக்கு வந்தது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் முன்னணி வகிக்கும் சுவிட்சர்லாந்தின் சொனோவா நிறுவனம், Phonak brand இன் கீழ் EON என்ற புதிய AI தொழில்நுட்பக் காதுகேட்கும் கருவித் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இறைச்சல் மிகுந்த இடங்களில் கூட, பின்னணிச் சத்தத்தைப் பிரித்தெடுத்துப் பேசுபவரின் குரலை மிகத் தெளிவாகக் கேட்க வைக்கும் Hypersonic என்ற புதிய AI சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய மாடல்களை விட 25 சதவீதம் சிறியதாகவும், 20 சதவீதம் எடை குறைந்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, 37 சதவீதம் குறைவான மின்சாரத்தையேப் பயன்படுத்துகிறது.
மேலும், இதன் பேட்டரி 38 மணி நேரம் வரை தொடர்ந்து உழைக்கும் திறன் கொண்டது. இன்றைய தினம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் இந்த சாதனம், அடுத்தடுத்த மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




