சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான நீதவான் நீதிமன்ற விசாரணை நிறைவு.

VIGNESWARAN ABIRAMY•18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு3
பகிர்க:WhatsAppFacebook
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான நீதவான் நீதிமன்ற விசாரணை நிறைவு.

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான நீதவான் நீதிமன்ற விசாரணை நிறைவு. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாகக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆரம்பகட்ட விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மன்றில் கோரிக்கை விடுத்தது.  குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்களான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மேலும், நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நாளை (19) குற்றப்பத்திரிகை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm