
ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஓமன் கடற்கரைக்கு அப்பால், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
14 இந்திய மாலுமிகளைக் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், ஓமன் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வான்வழிப் பொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். கலாச்சாரம்காண்
‘எம்எஸ்வி அல் ஜுசுஃபி’ (MSV Al Jusufi) என்று அடையாளம் காணப்பட்ட அந்த கப்பல் திங்கட்கிழமை (02) தாக்குதலுக்கு உள்ளானதாக அமைச்சர் தெரிவித்தார்.
கப்பலில் இருந்த பதின்மூன்று பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஓமன் நாட்டு கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.
இருப்பினும், குஜராத்தைச் சேர்ந்த கந்தர் நஹிம் அஜிஜ் என்ற மாலுமி, காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




