அனோஜன் விடுதலை: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பைக் கோர தமிழரசுக் கட்சி தீர்மானம்!

அனோஜன் விடுதலை: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பைக் கோர தமிழரசுக் கட்சி தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிப்புக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞனான எஸ். அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, நாட்டின் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பொன்றைக் கோருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
அனோஜனின் விடுதலைக்காகவும் அவரது மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் தீவிர இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி அவசர தலையீட்டைக் கோரியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக, ஜனாதிபதியை நேரில் சந்தித்து அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் நேரடி இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இளைஞன் அனோஜனைப் பாதுகாப்பாக இலங்கைக்கு மீட்டெடுப்பதற்கான அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் ஒருங்கிணைந்து முன்னெடுப்பது காலத்தின் அவசரத் தேவையாகவுள்ளது என தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




