இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மற்றொரு வெற்றி: கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மற்றொரு வெற்றி: கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்து, சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ‘Fitch Ratings, இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை 'CCC+' என்பதிலிருந்து 'B-' ஆக உயர்த்தி இன்று (22) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சாதகமான மாற்றங்கள் மற்றும் நிதியியல் சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்தத் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புகள், பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை இந்தத் தரமுயர்வுக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
இருதரப்பு கடன் வழாங்குனர்கள் மற்றும் சர்வதேச பிணைமுறி முதலீட்டாளர்களுடன் (ISBs) இலங்கை அரசு எட்டியுள்ள வெற்றிகரமான உடன்பாடுகள், நாட்டின் வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்கவும் நிதி நிலைமையைச் சீரமைக்கவும் பெரிதும் உதவியுள்ளன.
வங்கிக் கட்டமைப்பின் மீதான அழுத்தம் குறைந்து வருவதோடு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதை இந்தத் தரமுயர்வு பிரதிபலிக்கிறது.
சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸின் இந்த அறிவிப்பானது, உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும், நாட்டிற்குள் புதிய வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படவும் சர்வதேச வர்த்தக உறவுகள் வலுப்பெறவும் இது வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




