சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பம்.

VIGNESWARAN ABIRAMY•19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பம்.

தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பம். குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரதமர் நரேந்திர மோடியின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையின் கீழ், தேசிய புலனாய்வு முகமையினால் (NIA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆறாவது பதிப்பு மாநாடு, 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றது.

இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள், சட்டம், தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் எனப் பலரும் பங்கேற்கின்றனர்.

பயங்கரவாத விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்துதல், வெளிநாடுகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறுதல், பயங்கரவாத நிதியுதவி வலையமைப்புகளை முடக்குதல் மற்றும் தீவிரவாதமயமாக்கலைத் தடுத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன. அத்துடன், மாநிலக் காவல்துறையினருக்கான விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டமும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm