சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மணிப்பூரில் கொடூரம்: காணாமல் போன 2 இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்பு - வெடித்தது மக்கள் போராட்டம்!

VIGNESWARAN ABIRAMY•2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மணிப்பூரில் கொடூரம்: காணாமல் போன 2 இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்பு - வெடித்தது மக்கள் போராட்டம்!

மணிப்பூரில் கொடூரம்: காணாமல் போன 2 இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்பு - வெடித்தது மக்கள் போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி காணாமல் போன டி. சோங்லாய் மற்றும் பாவோகின்லால் ஹாங் சிங் ஆகிய இரு இளைஞர்களின் உடல்கள் சாக்குப்பையில் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு மீண்டும் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது!

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தபாவு குகி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான டி. சோங்லாய் மற்றும் 20 வயதான பாவோகின்லால் ஹாங் சிங் ஆகியோர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி திடீரெனக் காணாமல் போயினர்.

அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இரு இளைஞர்களின் உடல்களும் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பேரணியைக் கலைத்தனர். தற்போது அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் கூடுதல் ராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm