சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் – 29 இந்திய மாலுமிகளுக்கு அச்சுறுத்தல்!

சுமி•31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் – 29 இந்திய மாலுமிகளுக்கு அச்சுறுத்தல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் – 29 இந்திய மாலுமிகளுக்கு அச்சுறுத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி, சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த MT ARZANA கப்பல் மீது ஏவுகணை போன்ற வெடிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு இந்திய மாலுமிகள் இருந்தனர்.

அடுத்த நாள், பனாமா நாட்டுக் கொடியுடன் 27 இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற MT LOUIS 1 கப்பலின் அடிப்பகுதியில் காந்த வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எஞ்சின் அறையில் தீப்பற்றியதுடன், கப்பலின் இயக்கமும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டு கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.

இரண்டு சம்பவங்களிலும் இருந்த 29 இந்திய மாலுமிகளுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடல் பகுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள மாலுமிகள், இந்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm