பெலாரஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கு: சுவிஸ் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

பெலாரஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கு: சுவிஸ் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்ட (Enforced Disappearance) விவகாரத்தில், அந்நாட்டின் முன்னாள் சிறப்புப் படை அதிகாரியான யூரி கராவுஸ்கி (Yuri Garavsky) குற்றவாளி என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
உலகளாவிய அதிகார வரம்பின் (Universal Jurisdiction) கீழ் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முதல் வழக்கு இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு பெலாரஸ் நாட்டில் அப்போதைய அதிபர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோவிற்கு எதிராகச் செயல்பட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 3 பேர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பெலாரஸின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த யூரி கராவுஸ்கிக்குத் நேரடித் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




