சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பிஸ்லெரி குடிநீர் பாட்டிலில் புற்றுநோய் ரசாயனம்: சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி

VIGNESWARAN ABIRAMY•23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
பிஸ்லெரி குடிநீர் பாட்டிலில் புற்றுநோய் ரசாயனம்: சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி

பிஸ்லெரி குடிநீர் பாட்டிலில் புற்றுநோய் ரசாயனம்: சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரபல 'பிஸ்லெரி' நிறுவனத்தின் குடிநீர் பாட்டில் மாதிரியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி வழங்கியுள்ளது.

பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 'புரோமேட்' (Bromate) எனும் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில், குறித்த நீர் மாதிரி மற்றொரு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த இரண்டாவது பரிசோதனையிலும், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய 'பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்' (PAHs) எனப்படும் நச்சு ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm