சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கல்வித்துறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டம் குறித்து பிரதமர் முக்கிய தகவல்!

VIGNESWARAN ABIRAMY•18 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கல்வித்துறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டம் குறித்து பிரதமர் முக்கிய தகவல்!

கல்வித்துறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டம் குறித்து பிரதமர் முக்கிய தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெறும் பரீட்சைக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் பிள்ளைகளுக்குப் பதிலாக, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைமுறையை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், கல்வி அமைப்பில் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் வரும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கு 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm