தூரப் பிரதேசப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க இடமாற்றக் கொள்கையில் மாற்றம்!

தூரப் பிரதேசப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க இடமாற்றக் கொள்கையில் மாற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தற்போதைய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துவது குறித்துப் பாராளுமன்றக் குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவது தொடர்பில் நிலவும் சட்ட ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது குறித்து இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், ஆசிரியர் இடமாற்றச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர எல்லையினால் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற தூரப் பிரதேசப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த 30 கிலோமீற்றர் தூர எல்லையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர் இடமாற்றச் சபைக்கு அறிவிப்பதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




