
அனிருத் திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று, புதுமணத் தம்பதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். நேவி ப்ளூ நிற பந்த்கலா உடையில் வருகை தந்த முதலமைச்சர் விஜய், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
மேலும், முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் அட்லி உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




