சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

சோழவந்தான் : 3 நாட்களாக உடைந்து ஓடும் குடிநீர் குழாய் - லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்!

குரு•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
சோழவந்தான் : 3 நாட்களாக உடைந்து ஓடும் குடிநீர் குழாய் - லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்!

சோழவந்தான் : 3 நாட்களாக உடைந்து ஓடும் குடிநீர் குழாய் - லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 3 நாட்களாகப் பிரதான குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 3 நாட்களாகப் பிரதான குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உடைப்பு ஏற்பட்டது. சோழவந்தானிலிருந்து திருமங்கலம் நோக்கிச் செல்லும் இந்த பிரதான கூட்டுக்கடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில், குழாயில் ஏற்பட்ட பெரிய உடைப்பு காரணமாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டுக்கடங்காமல் வீணாகச் சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், பல லட்சம் லிட்டர் நன்னீர் வீணாகக் கழிவுநீரில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதிச் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிச் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் அபாயம் நிலவுவதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் சூழலில், பல லட்சம் லிட்டர் தண்ணீர் தொடர்ச்சியாக வீணாவது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்தும் அப்பகுதி மக்கள் கடும் வேதனையும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.


சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் உள்ளாட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைத்துத் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm