சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: யோஷித, கரன்னாகொட மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

VIGNESWARAN ABIRAMY•17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: யோஷித, கரன்னாகொட மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: யோஷித, கரன்னாகொட மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கினை முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகைமைகள் பூர்த்தியாகாத நிலையில், யோஷித ராஜபக்‌ஷவை இலங்கை கடற்படையின் அதிகாரியாகக் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசாங்கத்தின் பெருந்தொகை நிதியைச் செலவிட்டு அவரை பிரித்தானியாவின் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பியமை ஆகியவற்றின் மூலம் ஊழல் புரிந்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், வழக்கை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி முன் விசாரணை மாநாட்டிற்காக அழைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பிரதிவாதிகள் தரப்பிற்குத் தேவையான ஆவணங்களை வழங்குமாறும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm