சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஊழல் குற்றச்சாட்டு: யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் மேல் நீதிமன்றத்தில் நிரபராதிகள் என அறிவிப்பு

VIGNESWARAN ABIRAMY•23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
ஊழல் குற்றச்சாட்டு: யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் மேல் நீதிமன்றத்தில் நிரபராதிகள் என அறிவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு: யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் மேல் நீதிமன்றத்தில் நிரபராதிகள் என அறிவிப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நிரபராதிகள் என, யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் திறந்த மன்றில் பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டன. தாம் குற்றமற்றவர்கள் என இருவரும் நீதிமன்றில் அறிவித்ததைத் தொடர்ந்து, சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை, பிரித்தானியாவின் றோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் கற்கை நெறியொன்றுக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm