சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கச்சா எண்ணெய் விலை 9% சரிவு: அதிர்ச்சி அளித்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்!

VIGNESWARAN ABIRAMY•5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கச்சா எண்ணெய் விலை 9% சரிவு: அதிர்ச்சி அளித்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்!

கச்சா எண்ணெய் விலை 9% சரிவு: அதிர்ச்சி அளித்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 9 சதவீதத்திற்கும் அதிகமாகக் சரிவடைந்துள்ளன.

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் பின்னடைவைச் சந்தித்தது.

இத்தேர்தல் தோல்விக்கு ஈரான் உடனான போர்ச் சூழலே நேரடிக் காரணம் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 9 சதவீதம் சரிந்து 87.76 டாலராகக் குறைந்துள்ளது. அதேபோல, சர்வதேச அளவுகோலான ப்ரென்ட் (Brent) கச்சா எண்ணெய் விலையும் 9 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து, பீப்பாய் ஒன்று 93.61 டாலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸ் அவைகளைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சி, ஈரானுடனான போரை முடிக்க அழுத்தம் கொடுக்கும் என்பதால், மத்திய கிழக்கில் பதற்றம் தணியலாம் என்ற எதிர்பார்ப்பே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm