
கட்டுநாயக்கவில் 235 சிகரெட் காட்டூன்களுடன் மூவர் சுங்க அதிகாரிகளால் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சட்டவிரோதமாகச் சீன சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை மலேசியா ஊடாக நாட்டுக்குக் கொண்டு வந்த 23 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் மூவரே இவ்வாறு சிக்கியுள்ளனர்.
அவர்களது பயணப் பொதிகளிலிருந்து 235 சிகரெட் காட்டூன்களில் அடைக்கப்பட்டிருந்த 47,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க விசாரணையின் பின்னர் குறித்த சிகரெட்டுகள் அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் மூவருக்கும் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




