சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

BBC, HSBC உள்ளிட்ட பல முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்!

VIGNESWARAN ABIRAMY•18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
BBC, HSBC உள்ளிட்ட பல  முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்!

BBC, HSBC உள்ளிட்ட பல முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலகின் முன்னணி ஊடக நிறுவனமான பி.பி.சி, எச்.எஸ்.பி.சி வங்கி, சி.என்.என் , மற்றும் சூம் உள்ளிட்ட சுமார் 200 முன்னணி இணையத்தளங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 16-ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், நிறுவனங்களின் இணையத்தள வடிவமைப்பிற்கு உதவும் மூன்றாம் தரப்பு தளமான 'ஒப்டிமைஸ்லி' ஊடாக தீங்கிழைக்கும் மென்பொருள் குறியீடுகள் செலுத்தப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்கொட் ஹெல்மே கண்டறிந்துள்ளார்.

பயனர்களின் கிரெடிட் கார்ட் விபரங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் ஐபோன் , ஐபேட்ஆகிய அப்பிள் சாதனங்களின் தரவுகளைத் திருடுவதே இந்தத் தாக்குதலின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இதன் மூலம் ஹக்கர்கள் சுமார் 7 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பாதிக்கப்பட்ட பெரும்பாலான இணையத்தளங்களில் இருந்து அந்தத் தீங்கிழைக்கும் குறியீடுகள் நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக 'ஒப்டிமைஸ்லி' நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm