சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு!

VIGNESWARAN ABIRAMY•1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு!

அர்னாப் புயல் பேரழிவு: 5,800 குடும்பங்கள் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரமடைவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் தாக்கம் காரணமாக இதுவரையில் 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இன்று (01) வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதிலும் உள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த 137 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்தச் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்தத் பேரிடர்களால் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் அனர்த்தங்களால் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர்; 08 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 03 பேரைக் காணவில்லை அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேத விவரங்களைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.  இந்தச் சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரி மாவட்டமே அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இரண்டாவதாக அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm