சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மோசமடைந்து வரும் உடல்நிலை: பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு இம்ரான் கான் எழுதிய அவசரக் கடிதம்!

VIGNESWARAN ABIRAMY•16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
மோசமடைந்து வரும் உடல்நிலை: பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு இம்ரான் கான் எழுதிய அவசரக் கடிதம்!

மோசமடைந்து வரும் உடல்நிலை: பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு இம்ரான் கான் எழுதிய அவசரக் கடிதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், சிறைச்சாலையில் தனது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எழுதியுள்ள திறந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் காரணமாக மாரடைப்பு அல்லது மூளை இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வலது கண் பார்வையில் சுமார் 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான மருத்துவ உதவிகள் மறுக்கப்படுவதால் சிறையிலிருந்து தான் உயிரோடு திரும்புவேனா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தனக்கும் தனது மனைவிக்கும் உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்குமாறு அவர் நாட்டின் உய நீதிமன்ற நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், இச்சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm