சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

Diamond League ஈட்டி எறிதல்: இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடம் பிடித்து சாதனை!

ஆகாஷ்•22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
Diamond League ஈட்டி  எறிதல்: இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடம் பிடித்து சாதனை!

Diamond League ஈட்டி எறிதல்: இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடம் பிடித்து சாதனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடைபெற்ற Diamond League Athletics Championships தொடரின் 12-வது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் வீரர் ரூமேஷ் தரங்க 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இன்றையதினம் (22) காலை நிறைவடைந்த இப்போட்டியில் கடும் சவாலை அளித்த இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தையும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


இந்த வெற்றியின் மூலம் ரூமேஷ் தரங்க தொடர்ச்சியாக மூன்று டைமண்ட் லீக் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துத் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் வரலாற்றில் இலங்கை பெற்ற 6வது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்திருந்தார். 


2006-ல் பளுதூக்கும் வீரர் சிந்தன கீத்தல் விதானகே தங்கம் வென்றதற்குப் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து இலங்கை பெற்ற ஒரே தங்கப் பதக்கமாகவும், 1950-ல் டங்கன் வைட் தங்கம் வென்றதற்குப் பின்னர் 76 ஆண்டுகள் கழித்துத் தடகளப் பிரிவில் இலங்கை பெற்ற முதலாவது தங்கப் பதக்கமாகவும் அவரது காமன்வெல்த் வெற்றி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm