அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முன்னேற்ற மீளாய்வு!

அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முன்னேற்ற மீளாய்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பொதுமக்களுக்கு மிகவும் விரைவான, திறம்பட செயல்படக்கூடிய மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டம் குறித்த முக்கிய மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (29) பிற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பொதுமக்கள் தங்களின் அன்றாட அரசு சார்ந்த தேவைகளை எவ்வித தாமதமுமின்றி எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டங்களை விரைவுபடுத்தவும், சேவை விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




