'சீன்' படக் கதை தொடர்பில் இணையத்தில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

'சீன்' படக் கதை தொடர்பில் இணையத்தில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஜித்து மாதவன்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் சூர்யா ‘இன்பராஜ்’ என்ற மாறுபட்ட காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களைப் பார்த்த ரசிகர்கள், "சூர்யா இப்படத்தில் கண் தெரியாதவராக (பார்வையற்றவராக) அல்லது முகங்களை அடையாளம் காண முடியாத குறைபாடு உள்ளவராக நடிக்கிறாரா?" என்ற பல கணிப்புகளை இணையத்தில் பரப்பி வந்தனர்.
இந்தக் வதந்திகளுக்குப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் எழுத்தாளர் திராவிட் செல்வம் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், "சூர்யா இப்படத்தில் பார்வையற்றவர் கிடையாது. அவர் வழக்கத்திற்கு மாறான, ஒரு விசித்திரமான அணுகுமுறையைக் கொண்ட இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
இணையத்தில் பரவும் 'பார்வையற்றவர்' என்ற கதைகள் வெறும் ஊகங்களே" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இயக்குநர் பகிர்ந்த தகவலின்படி:
சூர்யா (DSP இன்பராஜ்) ஒரு வழக்கத்திற்கு மாறான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.இந்த விசாரணைக்காக, அவர் விசித்திரமான குணம் கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான குழுவை அமைக்கிறார்.
அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இயல்பற்ற குணநலன்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதே பெரும் சவாலாக இருக்கிறது.அந்த விசித்திரமான மனிதர்களை வைத்துக்கொண்டு சூர்யா எவ்வாறு வழக்கை விசாரிக்கிறார், அதனால் ஏற்படும் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான குழப்பங்களே 'சீன்' படத்தின் முதன்மை கதையாகும்.
2D என்டர்டெயின்மென்ட் மற்றும் அகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




