சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

வெளிநாட்டு மாணவர்களுக்குப் பேரிடி: துணைவர்கள், குழந்தைகளை அழைத்து வர அவுஸ்திரேலியா தடை?

VIGNESWARAN ABIRAMY•17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வெளிநாட்டு மாணவர்களுக்குப் பேரிடி: துணைவர்கள், குழந்தைகளை அழைத்து வர அவுஸ்திரேலியா தடை?

வெளிநாட்டு மாணவர்களுக்குப் பேரிடி: துணைவர்கள், குழந்தைகளை அழைத்து வர அவுஸ்திரேலியா தடை? குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தற்காலிகக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிகளில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் காலத்தில், தங்களின் துணைவர்கள் (Spouse) மற்றும் குழந்தைகளை உடன் அழைத்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், கல்வி முடிந்த பிறகு தற்காலிகக் குடியேற்ற விசாக்களைப் புதுப்பிப்பதற்கான அல்லது வேறு விசா பிரிவுகளுக்கு மாறுவதற்கான நடைமுறைகளை மிகவும் கடுமையானதாக மாற்ற அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவால் அங்கு உயர்கல்வி பயிலத் திட்டமிட்டுள்ள இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm