இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது, வளாகத்திற்கு அருகில் உள்ள இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர்களிடம் செல்வதன் மூலம் பண இழப்பு மட்டுமன்றி, முக்கியமான ஆவணங்களையும் இழக்கும் அபாயம் உள்ளதாகத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஒருநாள் சேவைகளுக்கான நேர ஒதுக்கீடுகளை இணையவழி மற்றும் தொலைபேசி மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், வாகன உரிமை மாற்ற ஆவணங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலும் சமர்ப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலி இடைத்தரகர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றாமல், திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ அதிகாரிகளை மட்டுமே அணுகுமாறு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




